மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளித்திட வேண்டி மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் , ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கிருஷ்ணசாமி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, குன்னம் வட்ட செயலாளர் செல்லமுத்து, ஆலத்தூர் வட்ட செயலாளர்கள் செல்லதுரை, வேப்ப நாட்டை வட்ட செயலாளர் சக்திவேல், மின்னரங்கச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளித்திட வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்திட வேண்டும், இந்த ஆண்டு மருத்துவர் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு மாநில அரசு நடத்திக் கொள்ள அனுமதி அளித்திட வேண்டும், எளிய மாணவர்களை உயிர்பலி வாங்கும் சமூக நீதியை குழி தோண்டிப்பதைக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு முன் வைத்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ,அகஸ்டின், ,கலையரசி, ரங்கநாதன் , ராஜேந்திரன், கருணாகரன் , ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ரங்கராஜ், கோகுலகிருஷ்ணன், சரவணன், மகேஸ்வரி, வசந்தா, சின்ன பொண்ணு, பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story