திருமருகல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோப்பு படம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து முன்னாள் எம்எல்ஏ தலைமையிலும் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு,மாவட்ட குழு உறுப்பினர் லெனின்,ஒன்றிய குழு பாரதி,ரவி,முருகபாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கணபதிபுரம் மெயின் ரோடு பகுதியில் திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமருகல் ஒன்றிய ஆணையர் ராஜகோபால்,திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ்,ஒன்றிய பொறியாளர் பாலச்சந்திரன்,ஏர்வாடி ஊராட்சி செயலர் சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் மக்களின் அடிப்படை தேவைகளான குரும்பூர் - மருதாவூர் சாலை,விச்சூர் -சித்தம்பல் சாலை,குரும்பூர் -ஏர்வாடி பரமநல்லூர் சாலைகளை ஒரு வார காலத்தில் சரி செய்து தருவதாகவும்,தெருவிளக்கு, மின்சார வசதி,பஸ் வசதி உள்ளிட்டவைகள் படிப்படியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.