மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு

பெரம்பலூரில் தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் நடந்த மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பை சிஐடியு மாநில துணைத் தலைவர் மகேந்திரன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் நடத்தும் 3ம் ஆண்டு மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது, ஜனவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ள இந்த தொடர் பயிற்சி வகுப்பின் 5வது வாராமான பிப்ரவரி - 17ஆம் தேதி சிஐடியு மாநிலத் துணைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு, இந்திய தொழிலாளர் இலக்க வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மார்க்சியம் என்பது என்ன, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகள், இந்திய தொழிலாளர் சட்டம் இதில் தொழிலாளர்களுக்காக முனியுடன் செயல்படும் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ன இதற்கான இலக்க வரலாறு குறித்து எடுத்துரைத்து பேசினார், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், சி ஐ டி யு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் , ClTU மாவட்டத் துணைச் செயலாளர் செல்வி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story