காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் 13ம் ஆண்டு பால்குடம் ஊர்வவலம் !

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் 13ம் ஆண்டு பால்குடம்  ஊர்வவலம் !

பால்குடம் ஊர்வலம் 

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் துவக்கிய நிலையில் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். நேற்று அதிகாலை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. மாலையில் காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் கோவிலில் இருந்து 13ம் ஆண்டு பால்குட ஊர்வவலம் நடந்தது. இதில், திரளாக பங்கேற்ற பெண்கள், பால்குடத்தை ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பால்குட ஊர்வலத்திற்கான ஏற்பாட்டை விஸ்வரூப தரிசன சபா தலைவர் குமார், செயலர் பிரபு, பொருளாளர் சுந்தர வடிவேல், திருக்கோவில் பக்தர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கோவில் முன் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சார்பில் சிறப்பு தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் அன்னதானம் நடந்தது. வாகன மண்டபம் அருகில் விட்டல் நிவாஸ் குழுவினரின் சங்கீத நிகழ்ச்சியும், மாரியம்மன் தெருக்கூத்து நாடக குழுவினரின் நாடகமும் நடந்தது.

Tags

Next Story