ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஆறாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஆறாம் நாள் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு அருள்மிகு சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி மேல வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை பக்தர்களும் பொதுமக்களும் பக்தியுடன் தரிசித்தனர்.

Tags

Next Story