திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் மாசி மாத தேரோட்டம்

திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் மாசி மாத தேரோட்டம்

தேரோட்டம்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் திருமுருக நாத சுவாமி திருக்கோவில் மாசிமாத தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் பழமை வாய்ந்த திருமுருக நாத சுவாமி திருக்கோவில் மாசிமாத தேரோட்டம்.திருமுருகநாதர் ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் பழமைவாய்ந்த திருமுருக நாத சுவாமி திருக்கோவில் உள்ளது.திருத்தலம் கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றாகவும்,மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது.

கடந்த 18ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது,தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பிரகாரா உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவையில் நடைபெற்றன, கடந்த 19ஆம் தேதி சூரிய சந்திர காட்சிகள்,20 ஆம் தேதிபூத வாகனம், 21-ம் தேதி புஷ்ப விமான காட்சியும், 22-ம் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சியும், 23-ம் தேதி திருக்கல்யாணமும் இனிதே நடைபெற்றன.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான மாசி மாத திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருமுருகநாதர் ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,ஏராளமான பக்தர்கள் திருத்தேரி வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்,வருகிற 29ஆம் தேதி மஞ்சள் நீர் விழாவுடன் திரு தேரோட்டம் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story