வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மாசி பௌர்ணமி பூஜை!

வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மாசி பௌர்ணமி பூஜை!

பரமத்தி அருகே உள்ள பெரிய சூரம்பாளையம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடந்த பௌர்ணமி பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியசூரம்பாளையத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் மாசிமாத பௌர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்க இராம்மேஸ்வர புண்ய தீர்த்தத்தால் அபிசேகம் செய்யப்பப்பட்டது. பின்னர் பால், தயிர், நெய், மற்றும் சந்தனத்தால் அபிசேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story