சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் கோவிலில் மாசிப் பொங்கல் திருவிழா!

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் கோவிலில் மாசிப் பொங்கல் திருவிழா!

 மாசிப் பொங்கல் திருவிழா!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மாசிப் பொங்கல் திருவிழா*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசிப் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இதற்காக அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த வாரம் வியாழன் அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசிப் பொங்கல் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் கரகம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அருள்மிகு மாரியம்மனைத் தரிசனம் செய்தனர். திருச்சுழி குண்டாற்றில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். மேலும் அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தீச்சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் பொம்மை போன்ற உருவங்களை நேத்திக்கடன் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் விடிய விடிய செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த மாசித்திருவிழாவில் விருதுநகர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடனைச் செலுத்தியும் அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story