ஆதிமாரியம்மன் கோவிலில் மாசித் தேர்த்திருவிழா

ஆதிமாரியம்மன் கோவிலில் மாசித் தேர்த்திருவிழா
X

ஆதிமாரியம்மன் கோவில்

சமயபுரம் அருகே இனாம்சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் மாசித் தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது.

திருச்சி மாவட்டம் இனாம்சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோவில் சமயபுரம் கோயிலின் உப கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித் தேர்த்திரு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவையொட்டி கடந்த 11 ந்தேதி பூச்சோரிதல் விழா தொடங்கியது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாசித் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதை யொட்டி இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்ததில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் சிம்மம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை உள் ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்ட விழா வருகின்ற மார்ச் 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்காரும், இணை ஆணையருமான பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story