குடும்ப தகராற்றில் கொத்தனார் தற்கொலை

குடும்ப தகராற்றில் கொத்தனார் தற்கொலை

 தற்கொலை

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பண்டாரம் பட்டி முனியசாமி கோவில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் பாலமுருகன்(36). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெட்ரூமில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story