கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

தற்கொலை 

புதுக்கடை அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.கொத்தனார். இவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அஜின் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story