பஸ்ஸிலிருந்து தள்ளியதில் கொத்தனார் உயிரிழப்பு :வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

பஸ்ஸிலிருந்து தள்ளியதில் கொத்தனார் உயிரிழப்பு :வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

பைல் படம் 

வடசேரி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கொத்தனாரை பஸ்ஸிலிருந்து தள்ளியதில் உயிரிழந்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உள்ள கடுக்கரையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45) கொத்தனார். இவர் கடந்த 14 . 6 . 2016 அன்று நாகர்கோர் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும், பஸ்ஸில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனை பஸ்ஸில் பயணம் செய்த காட்டுப்புதூரை சேர்ந்த ராஜேஷ் (34) என்பவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரனை ராஜேஷ் ஓடும் பஸ்ஸிலிருந்து வெளியே தள்ளினார். இதில் அவர் சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜேஷை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் ராஜேஷுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story