தற்கொலை நாடகமாடிய கொத்தனார் உயிரிழப்பு
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு (40). கொத்தனார். இவரது மனைவி ஜெமிலா (39) இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் .இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதால் அவரது மனைவி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே நேற்று வழக்கம் போல் மீண்டும் மது அருந்திய ஷைஜூ போதை தலைக்கேறிய உடன் தனது தாயாருடன் தகராறு செய்து, கயிற்றால் சுருக்கு போட்டு தற்கொலை நாடகமாடினார். அப்போது எதிர்பாராமல் அவர் நின்று கொண்டிருந்த நாற்காலி சரிந்து விழுந்தது. இதில் நைலான் கேட்டு சுருக்கு அவரது கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து தாய் வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவி ஜெனிலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.