சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலில் மாசி குண்டம் திருவிழா

சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயில் மாசி குண்டம் திருவிழா பந்தல்கால் பூஜை உடன் தொடங்கியது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா வரும் 16ஆம் தேதி பூச்சாட்டுத்துடன் துவங்கி15 நாட்கள் நடக்க உள்ளது. அதனை ஒட்டி தை மாத அம்மாவாசை தினதில் பந்தல்கால் பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துக்குமார், நாமக்கல் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிதலைவர் சுரேஷ் பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, ரவிக்குமார், ராதா சேகர், சம்பூரணம், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், அண்ணாமலை, ரமேஷ்,ஆகியோர் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வரும் 27 2 செவ்வாய்க்கிழமை அதிகாலை விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடக்க உள்ளது. 2.3.24 சனிக்கிழமை அம்பாள் திருவீதி உலா உடன் தயிர் சாதம் வழங்கி மஞ்சள் நீராட்டு விழா நடத்தி குண்டம் திருவிழா நிறைவுக்கு வரும் 15 நாட்கள் நடக்க உள்ள இந்த திருவிழாவில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் காப்பு அணிந்து குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.

Tags

Next Story