பெண்களுக்கு தாய் சேய் நலபெட்டகம்

பெண்களுக்கு தாய் சேய் நலபெட்டகம்
X

பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம்

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவமான பெண்களுக்கு தாய் சேய் நலப்பெட்டகம் வழங்கபட்டது.

சேலம் மாநகராட்சியில் தற்போது 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சராசரியாக மாதம் 120 முதல் 140 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு 1,200 முதல் 1,300 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் 6 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது.

இவற்றில் 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன. இதையடுத்து தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளிலேயே அதிக எண்ணிக்கையில் சுகப்பிரசவம் செய்து சேலம் மாநகராட்சி சாதனை படைத்துள்ளதாக மேயர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகர நல அலுவலர் யோகானந், மண்டலக்குழுத் தலைவர் அசோகன், மருத்துவ அலுவலர் செந்தாகிருஷ்ணா, கவுன்சிலர்கள் பழனிசாமி, ஷாதாஜ், கனிமொழி, வரதராஜ் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story