முன்விரோதம் காரணமாக தாய் மாமா படுகொலை

முன்விரோதம் காரணமாக தாய் மாமா படுகொலை
கொலையான ஸ்டான்லி அருள் , கைதான செல்வின் ஜெயகுமார்
திருவட்டாறில் முன்விரோதம் காரணமாக தாய் மாமாவை சுத்தியலால் அடித்து கொலை. குற்றவாளி கைது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அடுத்த செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் அருள் தம்பி (51). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளனர். இவரது சகோதரி மகன் அதே பகுதியை சேர்ந்த செல்வின் ஜெபக்குமார் (41) மகாராஷ்டிராவில் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்கிறார். இவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. செல்வின் ஜெயக்குமாருக்கும் ஸ்டான்லி அருள் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த செல்வின் ஜெயக்குமாரிடம் நேற்று ஸ்டான்லி அருள் தம்பி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் சுத்தியலால் தாய்மனான ஸ்டான்லி அருள் தம்பியை தாக்கி கொன்று விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் செல்வின் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் தாய் மாமாவை கொன்றதாக அவர் கூறினார்.

Tags

Next Story