மாதா சிலை உடைப்பு - போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரையாளம் கிராமத்தில் ஆரணி தேவிகாபுரம் சாலையில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. மேலும் பொன்னுசாமி அவரது விவசாய நிலத்தில் உள்ள வீட்டின் வெளியே வேளாங்கண்ணி மாதா சிலையை சுமார் 1.50 லட்சம் செலவில் அமைத்து ஏழு வருடங்களாக பராமரித்து வந்துள்ளார்.
இந்த வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ், வெள்ளி ஈஸ்டர் போன்ற திருவிழா நாட்களில் ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுவதும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சமூக விரோதிகள் வேளாங்கண்ணி மாதா சிலையை கற்களால் தாக்கி சிலையை சிதலப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது சம்பந்தமாக பொன்னுசாமி என்பவர் அளித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய காவல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் சிலையை மர்மநபர்கள் கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
