கணித மேதை ராமானுஜன்  பிறந்த நாள் விழா

கணித மேதை ராமானுஜன்  பிறந்த நாள் விழா

கணித மேதை ராமானுஜன்  பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன்  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

2012ம் ஆண்டு ராமானுஜனின் பிறந்த நாளான டிச. 22ஐ தேசிய கணித நாளாக இந்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் விழா குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. தலைவர் சீனிவாசன், தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தனர்.

விழாவில் செயலாளர் பிரபு பேசியதாவது, இருபதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஒப்பற்ற கணித மேதையாக திகழ்ந்த இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர். பெர்னோலியன் எண்கள் பற்றிய அவரது சிறப்பு கட்டுரையை 1911 ஆம் வருடம் இந்திய கணித சங்கம் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார். ராமனுஜம் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணிதம் சம்பந்தமான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியை சரிதா, நிர்வாகிகள் சரண்யா, செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story