பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் மாதேஸ்வரன் எம்பி பங்கேற்பு

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் மாதேஸ்வரன் எம்பி பங்கேற்பு
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி மாதேஸ்வரன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தேர்தலில் வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமேன ஜாமியா பள்ளி வாசலில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் நாமக்கல் நகரத்தை சேர்ந்த 2000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர். பக்ரீத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.

இந்த நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி மாதேஸ்வரன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தேர்தலில் வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது எம்.பி.மாதேஸ்வரன் பேசும் போது.. தேர்தலில் பணியாற்றிய இஸ்லாமியர்களை மறந்து விட முடியாது, என்றுமே நான் மறந்து விட மாட்டேன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், தொடர்ந்து இஸ்லாமிய நண்பர்களுக்கு நான் கடமை பெற்றுள்ளேன், அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் என பேசினார்.

Tags

Next Story