மத்தூர் அரசுப்பள்ளியில் மாணவர் தாக்கிய ஆசிரியர்: பெற்றோர் முற்றுகை
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள மத்தூர்பதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மார்கண்டேயன் என்பவரது மகன் ஜனா இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மாணவணுக்கு புத்தகங்கள் இதுவரை வழங்காமல் வீட்டுப்பாடம் எழுதி வர சொன்னதாக கூறப்படுகிறது. இதில் மாணவன் புத்தகம் ஏதும் இல்லாமல் வீட்டுப்பாடம் எழுதாமல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பள்ளிக்குச் சென்ற மாணவனை தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மாணவனை குச்சியால் அடித்தும் காதை கிழியதாக தெரிகிறது இதில் மாணவனுக்கு காயங்கள் ஏற்பட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து ஆசிரியர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தையின் பெயரில் அங்கிருந்து பெற்றொர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர். வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை சரமாரியாக தாக்கிய தலைமை ஆசிரியர் செயல் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.