மாத்துார் பீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் தீ மிதி திருவிழா!

மாத்துார் பீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் தீ மிதி திருவிழா!

தீமிதி திருவிழா

மாத்துார் பீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் தீ மிதி திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்துார் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பீளிக்கான் முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரி, சக்தி விநாயகர், முன்னோடி பூச்சி அய்யா சுவாமி கோயிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 22ம் தேதி காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24ம் தேதி விளக்கு பூஜை நடந்தது. விழா நாட் களில் தினமும் பீளிக்கான் முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரி சுவாமிகள் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவில் மாத்தூர், மண்டையூர், திருச்சி ஏர்போர்ட், ஆவூர், குண்டூர் பர்மா காலனி, நவல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story