நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்
மாவிளக்கு ஊர்வலம் வந்த பக்தர்கள்
நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நல்லம்பள்ளி வட்டம் எர்ரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது இதில் எர்ரப்பட்டி சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்தனர்.
முக்கிய வீதி வழியாக தாரை தப்பட்டை உடன் ஊர்வலம் ஆக மாரியம்மன் கோயில் வந்தடைந்தனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கோவிலை வந்தடைந்த மாவிளக்கு ஊர்வலம் சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது ஊர் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story