மணப்பாறை தொகுதிக்கு அதிகபட்சமாக 24 சுற்றுகள்

கரூர் மாவட்டம் மணப்பாறை தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகபட்சமாக 24 சுற்றுகள் நடைபெற உள்ளன.

கரூர் எம்பி தேர்தல் முடிவுகள்- மணப்பாறை தொகுதிக்கு அதிகபட்சமாக 24 சுற்றுகள். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தொகுதிகள் உள்ளடக்கியது கரூர் நாடாளுமன்ற தொகுதி ஆகும்.

ஆறு தொகுதிகளிலும் பதிவான ஓட்டு இயந்திரங்கள், கரூர் மாவட்டம், தளவா பாளையம் பகுதியில் செயல்படும் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கப்படவுள்ளது. ஆறு தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் வீதம் 84- அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதிக்கு 20 சுற்றுகளும், கிருஷ்ணராயபுரத்திற்கு 19 சுற்றுகளும், வேடசந்தூருக்கு 23 சுற்றுகளும், விராலிமலைக்கு 19 சுற்றுகளும், மணப்பாறை தொகுதிக்கு அதிகபட்சமாக 24 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story