மே தினம் - துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

மே தினம் -  துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

கொடியேற்று விழா 

திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் 138 வது மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

திதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் 138 வது மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

அதில் முக்கிய கோரிக்கைகளாக அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் சிபிஎஸ் பணம் பல வருடங்களாக கட்டாமல் நிலுவையில் உள்ளது அந்த பணத்தை உடனடியாக செலுத்தி தொழிலாளர்கள் வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும் துப்புரவு பணியாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டியில் கடனை வழங்க ஆறு மாதம் தவணை உடனடியாக வழங்க வேண்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் காண்ட்ராக்ட் நிலுவையில் உள்ள தினக்கூலியை உடனடியாக வழங்க வேண்டும் துப்புரவு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சிறப்பு அழைப்பாளராக AITUC மாவட்ட பொதுச்செயலாளர் தேவதாஸ் கலந்து கொண்டார் மாவட்டத் தலைவர் வெங்கடேசன். கொடியேற்றியவர் ஆறுமுகம் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story