தொட்டியம் அருகே கடைக்குச் சென்ற சிறுமி மாயம்: போலீசார் விசாரணை
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடைக்குச் சென்றவர் திடீரென மாயமானார்.காவல் நிலையத்தில் புகார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயதான சிறுமி. இவர் கடந்த இரண்டு நாட்களாக இவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தாயார் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story