சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்

சேலத்தில் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண் குழந்தையுடன் மாயமான நிலையில் போலீசார் விசாரணை.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பழனியப்பா கவுண்டர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பிரியங்கா (வயது28). இவர் 4 வயது மகனுடன் சேலம் வந்தார். பின்னர் ஈரோடு செல்வதற்காக கடந்த 11-ந்தேதி உறவினர் ஒருவர் அவரை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார். ஆனால் அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து சந்திரன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story