மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் குண்டம், முப்பூஜை விழா

குமாரபாளையத்தில் மகா சிவராத்திரி  மயான சூறையாடுதல் விழாவையொட்டி பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.  
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தட்டான்குட்டை மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா பிப். 24ல் முகூர்த்தக்கால் நடுதல், பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதில் பெண்கள் அக்னி சட்டி எடுத்தவாறும், அலகு குத்தியவாறும் வந்தனர். கணபதி ஹோமம், விளையாட்டு பெரியாண்டிச்சி அம்மன் கண் திறப்பு விழா, காடுகட்டும் விழா ஆகியன நடந்தன. மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு விழா, மகா குண்டம் பூ மிதித்தல் நடந்தது. மஞ்சள் ஆடை அணிந்தவாறு விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நேற்று முப்பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

Tags

Next Story