உங்களைத் தேடி உங்கள் ஊரில் - மயிலாடுதுறை ஆட்சியர்
உங்களை தேடி உங்கள் ஊரில்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சீர்காழி பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண்மை உருவாக்கி மையத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஊராட்சி பள்ளிகளில் கற்றல் திறனை மாவட்டட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி பனங்காட்டங்குடி பகுதியில் வசிக்கும் ஒன்பதுகுடும்பத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டிருந்தனர்.
அதனை ஆய்வு செய்து 9 குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிட வட்டாட்சியரிடம் அறிவுறுத்தினார் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி சட்டநாதபுரம், சீர்காழி, தென்பாதி, செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம், இ சேவை மையம், கூட்டுறவு நகர வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆதிதிராவிடர் நல விடுதி, முதியோர் இல்லம், பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
குறிப்பாக இந்த பகுதிகளில் அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்று அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காண வழிவகை செய்துள்ளனர். எனவே சீர்காழி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தேடி வரும் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு உண்டான குறைகளை தெரிவித்து உடனடி தீர்வை தேடி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த பட்டுள்ளது.