மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஒரு நாள் தடை

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஒரு நாள் தடை

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 

கடலலோரப் பகுதியில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள்ங செல்ல ஒருநாள் தடை மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இன்று காலை 8மணிவரை நிலவரப்படி கடற்கரை பகுதிகளான கொள்ளிடம் 33 மி.மீ., சீர்காழி 68.8 மி.மீ., தரங்கம்பாடி 53 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. கடற்கரை ஓர பகுதிகளில் கனமழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள 28 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story