மீனவ கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க அதிரடி முடிவு

மீனவ கிராம மக்கள்  தேர்தலை புறக்கணிக்க அதிரடி முடிவு

ஆலோசனை கூட்டம் 

சீர்காழி அருகே அடிப்படைவசதிகள் செய்து தராததை கண்டித்து மீனவ கிராம மக்கள் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கீழமூவர்கரை கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம்,மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும் கடலில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்துத் தர வலியுறுத்தியும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருவதாகவும் வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என குற்றம் சாட்டி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி உள்ளனர் இந்நிலையில் நேற்று மீனவர் கிராம தலைவர் தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அதில் முதல் கட்டமாக இன்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் அதனைத் தொடர்ந்து தங்களது ரேஷன் கார்டு ஆதார் கார்டுஉள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கத்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட ஆயத்தம் ஆகி வருவதால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags

Next Story