குமரன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

குமரன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

 திருக்கல்யாண உற்சவம் 

மயிலாடுதுறை அருகே பொறையார்  குமரன் கோவிலில் நடந்த வைகாசி விசாகப் பெருவிழா திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
. தரங்கம்பாடி அருகே பொறையாரில் மிகவும் பழமையான குமரன் கோவிலில் உள்ளது இக்கோவிலில் 108 ஆம் ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக வைகாசி விசாகப் பெருவிழா திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு குமரப்பெருமான், வள்ளி ,தெய்வானை, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் பல்லாக்கில் எழுந்தருள செய்து ஹோமம் வளர்க்கப்பட்டு கங்கனம் கட்டி கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

Tags

Next Story