குலதெய்வம் கோயிலில் வழிபட்ட மயிலாடுதுறை எம்.பி.

குலதெய்வம் கோயிலில் வழிபட்ட மயிலாடுதுறை எம்.பி.
மயிலாடுதுறை எம்.பி.
கும்மிடிப்பூண்டியில் குலதெய்வம் கோயிலில் மயிலாடுதுறை எம்.பி. வழிபட்டார்.

கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்தவா் சுதா ராமகிருஷ்ணன். உயா் நீதிமன்ற வழக்குரைஞரான இவா், மகளிா் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறாா். இந்த நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தோ்தல் முடிவில் சுதா ராமகிருஷ்ணன் 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். வெற்றிக்கு பிறகு சுதா ராமகிருஷ்ணன் கும்மிடிப்பூண்டிக்கு வந்து அங்குள்ள அவரது குலதெய்வ கோயிலான பெரியாண்டவா் கோயிலுக்குச் சென்று அவரது குடும்பத்தாருடன் வழிபட்டாா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய உறுப்பினற் உஷா ரவி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் டி.கே.மாரிமுத்து, கெளதம், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து கும்மிடிப்பூண்டியில் அவரது இலத்திற்குச் சென்று அவரது தந்தை படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் சாா்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலா் மதன்மோகன், காங்கிரஸ் நிா்வாகி எஸ்.எஸ்.பெரியசாமி, செல்வம், பெனிஷ், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக கவுன்சிலா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story