சிறிய வீடு, பெரிய மனசு - தன்னார்வலருக்கு பாராட்டு
புதுமனை புகுவிழா
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி மோகன். 15 ஆண்டுகளாக ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளின் நிலை குறித்து ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதுடன், மனநலம் குன்றி சாலையில் சுற்றித்திரிவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவர்களின் நிலையை மாற்றி உறவினர்களுடன் அனுப்பியும் வைத்துள்ளார். .
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி ஊராட்சி மேல தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி சுசீலா (65). கணவன் இறந்த நிலையில் தன் மகளுடன் இடிந்த நிலையில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த மூதாட்டி சுசீலா என்பவரின் நிலையை குறித்து பாரதி மோகன் நேரில் கேட்டறிந்தார். தன்னுடைய நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்போடு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சீட் கொண்ட பாதுகாப்பான புதிய வீடு ஒன்றை கட்டி முடித்தார். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இன்று முதாட்டி சுசீலாவிடன் அப்பகுதி கிராம மக்கள் முன்னிலையில் புதிய வீடு ஒப்படைக்கப்பட்டு புதுமனை புகு விழாவையும் சிறப்பாக நடத்தினார். மேலும், சமூக ஆர்வலர் பாரதி மோகனின் முயற்சி கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.