திருவிடைக்கழி தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவிடைக்கழி தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் 

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு தெருவில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோயில் முன் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு நேற்று முதல் காலை யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது பின் யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் பல பெண் பக்தர்களுக்கு சுவாமி வந்து ஆடினர்..

Tags

Next Story