மயிலாடுதுறை - தரங்கம்பாடி பழைய ரயில் பாதை ஆய்வு

மயிலாடுதுறை - தரங்கம்பாடி  பழைய ரயில் பாதை ஆய்வு

ஆய்வு 

1926முதல் இயங்கி 1986ல் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் பாதையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது.

1926 ஆம் ஆண்டு மயிலாடுதுறை தரங்கம்பாடிவரை புதிய ரயில் பாதை போடப்பட்டு அதில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயங்கி வந்தது. இந்த ரயில் சேவை மூலம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோயில், மண்ணம்பந்தல்,பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், ஆக்கூர் பகுதி மக்கள் மாணவ}மாணவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் பயனடைந்துவந்தனர். இந்நிலையில் வருவாய் குறைவாக உள்ளது என காரணம் கூறி 1986ஆம் ஆண்டு முதல் முற்றிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை தொடங்கி திருநள்ளாறு வரை இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ரயில் நிர்வாகம் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினரும் மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையும் போற்றும் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், ரயில் சுந்தர், கோவி சேதுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் வருவாய் ஊழியர்கள் பல்வேறு கட்சிகள் இதில் கலந்துகொண்டனர். தரங்கம்பாடியில் ரயில் நிலையம் இருந்த இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்கள் கோரிக்கை குறித்து ஒரு அறிக்கை அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

Tags

Next Story