கல்விதான் மாணவர்கள் வாழ்வின் ஓளி விளக்கு - மேயா் அறிவுரை

கல்விதான் மாணவர்கள் வாழ்வின் ஓளி விளக்கு -  மேயா் அறிவுரை
X

ஜெகன் பெரியசாமி

கல்வியும் புத்தகமும் மாணவர்கள் வாழ்வின் ஓளி விளக்காக அமையும் என்று மேயா் ஜெகன் பொியசாமி அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவியர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் தொழில்நுட்ப அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு மாவட்டத்தின் தலைநகாில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அங்கு தினசாி பல்வேறு தரப்பினரும் வருகைதந்து அதை பாா்வையிட்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாளை ரோட்டில் உள்ள வ.உ.சி கல்லூரி முன்புறம் அமைந்துள்ள மாநகராட்சி படிப்பகத்தினை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டார்.

அப்போது போட்டித் தேர்வுகளுக்கு தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்று மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை ஏற்று சில புத்தகங்களை அந்த படிப்பகத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், கல்வியும் புத்தகமும் நமது வாழ்வில் இரு கண்களாக இருந்து வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறது காரணம் ஓரு குடும்பத்தில் ஓருவர் படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டால் அவர்களை சார்ந்த அனைவரும் நன்மை அடைவார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் தளபதியார் மதுரையில் மிகப்பொிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்துள்ளார். இந்த மாநகரத்தில் உள்ள இளைஞர்கள் இந்த படிப்பகத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இது தான் நமக்கு ஓளிவிளக்காக அமையும். மாநகர மக்கள் தங்களால் இயன்ற புத்தகங்களை இந்த படிப்பகத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்வில் திமுக வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story