கனிமொழியை ஆதரித்து மேயர் பிரச்சாரம்!

கனிமொழியை ஆதரித்து மேயர் பிரச்சாரம்!

பிரச்சாரம்

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி, மீனவ பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இனிகோ நகர், பூபால்ராயபுரம் உள்ளிட்ட மீனவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்தது திட்டங்கள். கனிமொழி எம்பி ஆற்றிய பணிகள் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார், மேலும், மீனவ பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதி மக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story