திருப்பூர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருப்பூர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகளை ஆய்வு செய்த மேயர்

பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலம் 44 வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கதொட்டியை மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 2-வது மண்டலம் 44 -வது வார்டு பகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் முன்பு மற்றும் நொய்யல் வீதியில் அமிருத் திட்டத்தின் கீழ் நான்காவது குடிநீர் திட்டப்பணியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

உடன் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், துணை மாநகர பொறியாளர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, இளநிலை பொறியாளர் கோவிந்தகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story