தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு

தூத்துக்குடியில் அம்மா உணவகம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தாா்.


தூத்துக்குடியில் அம்மா உணவகம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. அவற்றில், எம்.சவேரியாா்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, உணவின் தரம், அளவை ஆய்வு செய்தாா்.

பின்னர் அவா், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தையும், 3ஆவது மைல் எப்சிஐ குடோன் அருகே நடைபெறும் பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணி, காரப்பேட்டை பள்ளி வழியாக உப்பளம் பகுதிக்குச் செல்லும் சாலையில் நடைபெறும் சீரமைப்புப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், தெற்கு மண்டல உதவி ஆணையா் (பொ) கல்யாணசுந்தரம், இளநிலைப் பொறியாளா் அமல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமாா், முத்துவேல், வட்டச் செயலா் பிரசாந்த் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.

Tags

Next Story