பேவர் தளம் அமைக்கும் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், முள்ளகாடு செல்லும் பாதையில் பேவர் தளம் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
முள்ளகாடு செல்லும் பாதையில் பேவர் தளம் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பாதசாரிகள் தங்கி ஓய்வு எடுத்து செல்வதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக முள்ளகாட்டு விலக்கின் அருகே உள்ள ஊரணியில் நடைபெற்று வரும் பேவர் கற்கள் பதிக்கும் பணிகளை பார்வையிட்டேன். இதன் மூலம் பாதசாரிகள் தங்கி ஓய்வெடுப்பது மட்டுமல்லாது ஊரணியில் பறவைகளும் நீர் அருந்தி செல்வதற்கு ஏதுவாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார். ஆய்வின் போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story