திருப்பூர் பகுதியில் பைக்கில் சென்று மேயர் ஆய்வு

திருப்பூர் 49 வார்டு பகுதியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பைக்கில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூரில் மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் 49-வது வார்டுக்கு உட்பட்ட அமர்ஜோதிகார்டன் ,R.Vநகர் மற்றும் வள்ளியம்மை நகர் பகுதிகளில், வடக்கு மாநகர செயலாளர்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பைக்கில் சென்று கழிவுநீர் வடிகால்கள் , சாலைகள் சீரமைப்பு,குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள தெருநாய்களை கருத்தடை செய்வதற்காக, தெருநாய்களை பிடிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.உடன் வட்ட கழக செயலாளர் மனோகரன் , பகுதி அவைத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் 49-வது வார்டு கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story