சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடியில் சாலை, வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "பாத்திமா நகர் ஆறாவது தெரு தென் புறத்தில் மழை நீர் வடிவதற்கு தடையாக உள்ள மணல் திட்டுக்களை அகற்றும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் அதனை நிறைவேற்றித் தருகிறேன் என்று தெரிவித்தார். மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Next Story