அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமானபணியை மேயர் நேரில் ஆய்வு

திருப்பூர்மாநகராட்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல்வகுப்பறையில் கட்டுமானபணியை மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூரில் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினர். 2024 ஆம் கல்வி ஆண்டிற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பள்ளியில் பயின்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story