சேலம் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு

சேலம் மாநகராட்சியில்  வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த மேயர்

சேலம் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சியில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் ரூ.24 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.24 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- சேலம் மாநகராட்சியில் நீண்ட காலமாக தீர்வுகாண முடியாத பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி அஸ்தம்பட்டி மண்டலம் 17-வது வார்டுக்குட்பட்ட அழகாபுரம் முருகன் கோவில் முதல் ஆலமரத்துகாடு வரை ரூ.8 கோடியில் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

15-வது வார்டுக்குட்பட்ட வரட்டாறு ஓடை குறுக்கே ரூ.96 லட்சத்தில் உயர்மட்ட இணைப்பு பாலம், 14 மற்றும் 15-வது வார்டுக்குட்பட்ட செர்ரி ரோட்டில் ரூ.3 கோடியே 65 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

6-வது வார்டு சரஸ்வதி நகர், முல்லை கார்டன் பகுதியில் ரூ.1 கோடியே 63 லட்சத்தில் வடிகால் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. கொண்டலாம்பட்டி மண்டலம் 49-வது வார்டு அகரம் காலனியில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் மழைநீர் வடிகால், ரூ.6 கோடியே 56 லட்சத்தில், சித்தர் கோவில் பிரதான சாலையில் மழைநீர் வடிகால், சிறுபாலப்பணி, சூரமங்கலம் மண்டலம் 3-வது வார்டு கே.ஏ.எஸ் மற்றும் ஸ்ரீராம் நகரில் ரூ.94 லட்சத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இஸ்மாயில் கான் ஏரி ரூ.39 லட்சத்தில் மறுசீரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க கோரி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Read MoreRead Less
Next Story