காலை உணவு திட்டம் - உணவை ருசி பார்த்த திருச்சி மேயர்
காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு
மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்த வேண்டும், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய குறிக்கோளாக கொண்டு தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையை பொறுத்தவரை காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள 358 அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் கொறத்தெரு மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடர்பாக மேயர் அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள் இன்று நேரில் பார்வை விட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காலை உணவுத் திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா? உணவுகள் தரம் குறித்தும் ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவிகளுக்குப் பரிமாறப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவை ருசித்து பார்த்தனர்.