சிவன் கோயில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சிவன் கோயில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

ஆய்வு 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் நாளை சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவன் கோவில் வளாகத்தில் சுகாதாரப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாளை சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி முன்னிட்டு ஆலயம் வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள்.

இதற்காக அறங்காவல குழு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சிவன் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் பட்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் தான் அகற்றி வருகிறது ஆனால் நீங்கள் மாமன்ற உறுப்பினர், சுகாதார குழு தலைவர் மற்றும் மேயர் யாருக்கும் முறையாக எந்தத் தகவலும் கொடுப்பதில்லை என அறங்காவலரிடம் கண்டித்தார். இதைத்தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பக்தர்களுக்கு வசதியாக சுகாதார வசதிகளை மேம்படுத்துவது மற்றும் மாநகராட்சி சார்பில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்வது குறிப்பு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

உடனடியாக அதிகாரிகளிடம் குடிநீர் மின்விளக்கு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பணி குழு தலைவர் கீதா முருகேசன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, பட்டர் சுப்பிரமணியன், மேயர் நேர்முக உதவியாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story