மதிமுக சார்பில் மாவீரர் நாள் அனுசரிப்பு..
இராசிபுரம் நகர மதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவீரர் நாள்"இன்னுயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போரில் இறந்ததை நினைவுகூரும் வகையில், ஒவ்வோரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி 'மாவீரர் நாள்' என அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மதிமுக சார்பில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவீரர் நாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழீழ விடுதலை போரில் தங்கள் உயிரையே ஆகுதியாக்கி, மண்ணில் வித்தாகி போன மாவீரர்களே! உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது! உங்களின் தன்னலமில்லா தியாகம் தமிழர்களின் ஆன்மாவை தட்டி எழுப்பும்! தமிழீழத்தின் விடுதலைக்கு வழி வகுக்கும்! தாயக தமிழ்நாட்டில் வாழும் நாங்கள் உங்கள் கல்லறை மீது ஆணையிட்டு கூறுகிறோம்! தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்றும் துணை நிற்போம்! வீரவணக்கம்!வீரவணக்கம்! போரில் மடிந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்கின்றோம்! தமிழீழ தேசிய தலைவர் பிராபாகரன் நீடூழி வாழ்க! உறுதிமொழி ஏற்ற பிறகு வீரவணக்க முழக்கம் எழுப்பபட்டது. மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும்அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story