ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம்

ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம்
X

  ரெட்டிபட்டியில் ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது.

ரெட்டிபட்டியில் ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது.

சேலம் மண்டல ம.தி.மு.க. தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நேற்று சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது.

இதற்கு சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் லிபியா சந்திரசேகர் தலைமை தாங்கினார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர் சங்கேஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இது குறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர் சங்கேஸ்வரன் கூறும் போது‘சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் முதற்கட்டமாக ரூ.40 லட்சம் தேர்தல் நிதி கட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது’ என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சேகர் (நாமக்கல் கிழக்கு), கணேசன் (நாமக்கல் மேற்கு), ராமதாஸ் (தர்மபுரி), பாலமுரளி (கிருஷ்ணகிரி) உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story