கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாறி நோய் தடுப்பூசி முகாம் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில்நடைபெற்று வருகின்றது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாறி நோய் தடுப்பூசி முகாமை கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் முரளி துவக்கிவைத்தார் இந்நிலையில் குனிச்சி கால்நடை மருத்துவர் பிரவீன்குமார் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டூர் . குனிச்சி. வக்கீல் அய்யர் தோப்பு. காக்கங்கரை. உள்ளிட்ட 10.க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது

கடந்த வருடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைகாலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி பல ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளது அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிருவாகம் இந்தவருடம் முன்னேற்பாடாக கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story