விழுப்புரம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோமாரி தடுப்பூசி முகாம் 
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது

விழுப்புரம் கோட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கால்நடைகளும், திண்டிவனம் கோட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 கால்நடைகளும் என விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. கால்நடைகளை கோமாரி நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும்,

முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் கால்நடை பரா மரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். இம்முகா மின்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு கால்நடைகளில் இருந்து ரத்த மாதிரிகள் மற்றும் சாண மாதிரிகள் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் சேக ரிக்கப்பட்டது.

இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொண்டு பயனடைந்தன. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா, உதவி இயக்குனர் மோகன், கால்நடை மருத்துவர் சேகர், உதவி கால்நடை மருத்துவர்கள் சிவக்குமார், பாலாஜி, சிவா, மகேஸ்வரி, சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமானது அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி வரை 30 நாட்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story